Tuesday, September 4, 2012

காதலில் தோற்றேன்

வெற்றி கிட்டும்
வெளிச்சம் நிச்சயம்
சுண்ணாம்பு வெளுக்கும்
பாலும் தெரியும்
இது என் காதல் நேரெண்ணங்கள்.

அழகை ரசித்த என் கண்கள்
அழவும் ரசிக்கக் கற்றது
அவள் செய்த மௌன மொழியால்.

சித்தர்கள் தவம் மௌனம்
மௌனப் பயன்
கடவுளை அடைதல்
காதல் தவப் பயன்
சித்திரவதைதான்

மாமியார் வீட்டு வாசத்திற்குப் பின்.

என் வீதிக் கூரையும் மாடியும்
வியந்து நோக்கின
அந்நியப்பட்டு விட்டேனாம்

என்னுடன் போட்டியிட்டு வளர்ந்த
மாவும் பலாவும்
பூக்கும் காய்க்கும்
தொழில் திரிந்தன
என் வரவு நிகழாததால்.

என் வீட்டு மழை தாங்கி
`கூரைக்காரனோ’,
ஓயாமல் எனைத் தட்டிச் செல்லும்
வாலு எங்கே ?

அவன் தட்ட நான் உதிர்ந்தாலும்
தட்டாமல் செல்லும்
சில நிமிடங்கள்
என்னுடன் ஊடலா
என்றெனை வாட்டின.

இங்ஙனம்ஒவ்வொன்றும் உருக
நான் மட்டும் ஏனோ அந்நியப்பட்டேன்.
மாமியார் வீட்டை கட்டிக்கொண்டு.