Tuesday, September 4, 2012

மாமியார் வீட்டு வாசத்திற்குப் பின்.

என் வீதிக் கூரையும் மாடியும்
வியந்து நோக்கின
அந்நியப்பட்டு விட்டேனாம்

என்னுடன் போட்டியிட்டு வளர்ந்த
மாவும் பலாவும்
பூக்கும் காய்க்கும்
தொழில் திரிந்தன
என் வரவு நிகழாததால்.

என் வீட்டு மழை தாங்கி
`கூரைக்காரனோ’,
ஓயாமல் எனைத் தட்டிச் செல்லும்
வாலு எங்கே ?

அவன் தட்ட நான் உதிர்ந்தாலும்
தட்டாமல் செல்லும்
சில நிமிடங்கள்
என்னுடன் ஊடலா
என்றெனை வாட்டின.

இங்ஙனம்ஒவ்வொன்றும் உருக
நான் மட்டும் ஏனோ அந்நியப்பட்டேன்.
மாமியார் வீட்டை கட்டிக்கொண்டு.






No comments:

Post a Comment